நான் ரசித்த 96

96

முன்னுரை :

                                      இவை முழுதும் என் பால், எனை  ஈர்த்த விடயங்கள். இது 96 எனும் திரைப்படத்திற்கு நான் உரைக்கும் விமர்சன உரை அல்ல.  தனித்து ஓர் இடத்தில் அமைதியை நாடாது எங்கு போகிறோம் எதற்கு ஓடுகிறோம் என செய்வதறியாது சுற்றும் என் சிந்தைக்கு, - நில் , சற்று பொறுமை கொள், ஓடுவதே வாழ்க்கை அல்ல, சுற்றி பார், உலகை ரசி , உணர்வை ரசி என பாடம் சொல்லி கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கிற ஒரு பார்வைக்குரிய கவிதை புத்தகம் எனக் கூற..!!
                                  இதற்க்கு முரண்பாடு கண்டிப்பாக உண்டு, ஓர் ஆய்வுகூறிகைக்கு மாற்று கூற்று என்பது நியதி, அதுவே  ஒரு புது அறிவியல் கூற்றுக்கு  மூலதனம். அவை தான் அறிவியலார் கருத்து. அவர்களது கருத்தே, எனது ஒப்பம். அனால், இக்கட்டுரை ஓர் ஆய்வறிக்கை அல்ல, இது ஒரு மிக குறுகிய அறிவுள்ள ரசிகனின் ரசனை கூற்று என கூறுவது சற்று மிகை என தோன்றினும், அவையே மெய்யுமாகி போனது என்பதை ஏற்க சற்று  இயலாத விடயமாக தோன்ற காரணம் பல இங்குண்டு . 
                                 இருப்பினும் இப்பதிவு ஏன்? வேண்டாத  கால விரயம் எனில், எழுத்தும் சிந்தனையும் கால விரயமாக கணக்கில் கொள்ள மாட்டாது. சிந்தையில் உதிக்கும் எவ்வித விடயமும் கலையே, அதில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம் என்பது என் பால் கருத்து. அப்போது ரசனை ஒரு பால் கூற்றா, பிடிக்கவில்லை என கூற கூடாத எனின். கூறலாம் , தாராளமாக முழங்கலாம். தனக்கு பிடிக்கவில்லை எனில், அது மதிக்கத்தக்க கலையல்ல , அதை ரசிப்பவர் மூடர் என கூறுவது ஏற்புடையதன்று. விமர்சனம் வேறு , தூற்றுவது வேறு..!!
                               "அப்டி என்ன தான் இருக்கு இந்த படத்தில, அவ்ளோ பெரிய படம்லாம் ஒன்னும்  இல்ல,நீ over scene போடாத "  என கூறுவோருக்கு , இப்படம் அப்டி ஒரு விதமாக பார்க்க இயலாது. "Visual Treat" என ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதற்கு மிகச் சிறந்த  உதாரணமான  ஒரு சில படங்களில் இதற்கும் ஓர் மிகப் பெரிய  பங்குண்டு என கூற விளையவே, இப்பதிவு..! இப்பதிவு நான் மிக ரசித்த 96 இன் பதிவுகளேயன்றி , மாற்று கூற்றல்ல ..!!

பொருளுரை:


               அரங்கம் இருளத்தொடங்க , பெயர் பலகைகள் ஆரவாரமின்றி ஒவ்வொன்றாக தொனிக்க, திரையில் வானத்து  நட்சத்திரங்களுக்கு, நடுவே நமது நட்சத்திரங்கள் பெயர் தெரிய , "96" logo மயக்கும் குழல்  ஓசையில் தொனித்தது. அவ்விசை அரங்க இருட்டினுள் வழி பிறழாது நம் இதயத்துள் நுழைந்து, திரைக்குள் கூட்டிசெல்கிறது..!!
               Guitar இன் இந்த சரத்தின் இனிய இசையாய் துவங்குகிறது பாடலும் படமும். "திமில் ஏறிய காளை மேல் தூங்கும் காகமாய்"  பூமியை அது போகு, போக்கில் வாழும் கதாநாயகன். ஆஹா..! இது அல்லவோ வாழ்க்கை என எண்ண தோன்றும்  பாடல் வரிகள், படத்தின் காட்சிகள்..!

              யாரும் இல்லா அக்கடற்கரையினில் அவன் பெயர் போக , வேறோர் பெயரையும் சேர்த்து எழுத முற்பட, அது என்ன என காண்பதற்குள் மேலெழுகிறது camera. ஒரு ரம்மியமான shot அது !!!  வாழா  என் வாழ்க்கை வாழவே என்று அவன் வாழ்க்கை போல் நம் வாழ்க்கை அமைந்திடாத என்ற ஏக்கத்தில் நாம் இருக்க, ராமும் ஓர் ஏக்கத்தில் இருந்த வண்ணம் இருக்கிறான். குளத்தில் மீன்கள் கால்களை கடிக்கும் போதும் அதை உணராது, ஏதோ எண்ணம் அவனை புடை சூழ்ந்திருக்கிறது.
            சென்னை செல்ல வேண்டிய ராம் போகும் வழியில் பாலம் வேலை நடப்பதால் தஞ்சாவூர் வழியாக செல்ல நேர்கிறது. ஆம், தஞ்சாவூர் அவன் சிறு வயதில் வாழ்ந்த  ஊர். நாம் போக வேண்டிய இடம் அது அல்ல, நம்மை google இங்கு போக சொல்கிறது என்ற மாணவியிடம் , "அது பேச்ச கேட்காத என் பேச்ச கேளு" என்ற போது , technology இல் இருந்து வெளிவந்து மனிதம் ரசிக்கும் இடத்திற்கு போவோம் என்பதையும்,"கண்ணாடிய கீழ இறக்கு, எப்படி இருக்கு எங்கூரு காத்து" என்ற போது ஒரு கிராம நபரின் பெருமை அதிலே உள்ளது என்பதையும் மிக அழகாக விவரித்தது.     
                  இப்படத்தில் அக்காவல் தெய்வம் பாத்திரம் எனை கவர்ந்தது மிகை இல்லை. பழைய மாணாக்களை பார்த்து எல்லா watchman  கும்  வருகிற ஓர் உணர்வையே அவர் வெளிப்படுத்திருந்த போதும், அவர் குணங்கள் சில என்னை கவர்ந்தது. ராம் ஐ கண்டதும் அவர் முதலில் தன்னுடைய ராம் என உரிமையாக கூப்பிட்டதும் சற்று நிலை உணர்ந்து , ஒரு வேளை  ராம் பழைய ராம் இலை போலும் என  நினைத்து மரியாதை கொடுக்கும் நிமித்தம். பின் அவன் பழைய ராம் தான் என உணர்ந்து சந்தோசமாய் உரிமையோடு கூப்பிட்டது. பின் அவனை மட்டுமின்றி அவன் தோழனையும் நினைவு வைத்து நலம் விசாரித்தது, "பின்ன,! அப்டி இப்டி இருக்கும், எல்லாம் சரி  ஆயிடும்" என அலைபேசியில் அவர் காட்டிய அறிவுரை ஒரு நல்ல உறவினை பிரதிபலித்தது.அது போல், ராம் பழைய நினைவுகளை ஆசை போட்டு கொண்டிருக்கும் வேளையில், அமைதியாக அவனை தொந்தரவு செய்யாது தயக்கத்துடன் அமர்வது, அவர் பணம் ஏதும் கேட்க போகிறார் என்று நினைத்த  பொழுது, அவரோ "ராம் அந்த கல்ல கொஞ்சம் எடு"  என சொல்லி, அவர்கள் வாடிக்கையாக உண்ணும் ஒரு பழத்தை ராமிடம் குடுத்து, அவன் உடைத்து கொடுத்த விதையும் அவன் வாயிலே ஊட்டி கொணர்ந்தது அருமையிலும் அருமை.

              தஞ்சாவூரில் இருந்து வெளிப்பட்டதும், தன் பள்ளி whatsapp group  இல் தன் பால்ய சொந்தங்களின் உரையாடலில் புகுந்ததும், நம்மிடையே நடக்கும் உணர்வை தந்தது.
              பள்ளி தோழர்கள்  தோழிகள் நீண்ட நாட்கள் பின் கூடியதும், அவர்களிடம் நடக்கும் சின்ன பேச்சு வார்த்தைகள் ரசனைக்கும் மேலாக நம்மை ஆட்கொள்ளும்

             என்னதான் வகுப்பில் அவ்ளோ பேர் படித்தாலும், தான் அண்ணனாக நினைத்த ராமின் வருகை எதிர்பார்த்து , அவனுக்கென்ன தான் செய்த  gulab jamun ஐ  எவருக்கும் தராது பாதுகாத்து காத்து நிற்கும் சுபாஷினி.கொள்ளை பிரியம். ராமை கண்டதும் அனைவரும் ஒரு மித்த குரலில் "வாடா காட்டான்" என கட்டிபுடித்த அன்பு, நண்பர்களுக்கென உரித்தான ஒன்று.

          . நண்பர்களின் அன்பில்  இருந்து தன்னை விடுவித்து, தனக்காகவே உட்கார்ந்திருக்கும் அத்தோழி பால் செல்கிறான் ராம். சென்றதும் அவர்களது உரையாடல், தேனினும் சுவை 

           எங்கும் மகிழ்ச்சி. காணும் இடமெல்லாம் சந்தோச புன்னகைகள் பூத்து மலர, ராம் முன் சுபாஷினி இன்னும் யார்லாம் வர இருக்கிறது என்று கேட்டதும் ஆரம்பிக்கறது ஒரு மாற்றம். அவன் ராம் முன் வேண்டாம் என கூற முயல, அதுவோ சுபாஷினி மரமண்டைக்குள் செல்ல மறுக்கிறது. ராம் யார் இன்னும் வர இருக்கிறார் என்பது தெரிய வேண்டும் என்பது நியதி. இது எல்லாம் நடப்பது போல. இன்னும் சுபாஷினி மண்டைக்குள் விடயம் செல்ல வில்லை. கடைசியாக ராமிடம் சொல்ல வேண்டியதாயிற்று.வரையறுப்பது "ஜானு" ...!!!


        அதுவரை புன்னகை பூத்த முகங்கள் மட்டுமயே தெரிந்த ராமின் கண்ணுக்கு , சந்தோச அலை ஒலிகள் மட்டும் வீசிய ராமின் இரு காதுக்கு , எல்லாம் மறந்து போகிறது. அவன் கேட்க்கும், பார்க்கும் விடயங்கள் எல்லாம் கண்ணுக்கும், காதுக்கும் அன்றி , அவன் மூளைக்கு செல்ல வில்லை. ஏனெனில்  அவன் மனம் நாடுவதை அதை அல்ல, ஒன்றே ஒன்று தான்..!! "ஜானு"..!! அவன் சுற்றத்தை மறந்தான். எங்கும் மௌனம். ஒரு கணம் நிலை உணர்ந்து, அவன் வழக்கமாய் இருப்பது போல் நடிக்க முயல்கிறான். முடியவில்லை, அவன் செவி  கேட்க நினைப்பது ஒற்றை  மொழியையே,
அவன் கண் பார்க்க விழைவது ஒற்றை உலகையே  "ஜானு". இந்த நொடியில் இருந்து ராம் நம்முள் புகுகிறான். அவனது எண்ண ஓட்டங்களை  நம்மில்  விதைக்கிறான் \. இதுவே இப்படத்தை போற்ற தகுதியான ஒரு மய்யத்தை ஏற்படுத்துகிறது. இதன்பின் நடக்கும் அனைத்து காட்சிகளும் நமக்கு  நடப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது...!!!

        காதல் என்றாலே இளையராஜா தான். அன்றிலிருந்து இன்று வரை. படம் இளையராஜாவின் இசையோடு நம்மை 1994 இற்கு கூட்டி செல்கிறது, ராமின் எண்ண ஓட்டங்களில்.
    "புத்தம் புது காலை" பாடலின்  பின்னணி இசையில் நம்மை ஒரு பள்ளிக்கு கூட்டி செல்கிறார்கள். பின்னணி இசை நிற்கிறது . படத்தின் மிக பெரிய சக்தியாக இந்த அமைதியை கூறுவேன். இவ்வமைதியே நம்மை அவர்களிடம் நெருங்கச் செய்கிறது.


       "பூவில் தோன்றும் வாசம்
          அதுதான் ராகமோ?
          இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
          அதுதான் தாளமோ?
          மனதின் ஆசைகள்..
         மலரின் கோலங்கள்..
        குயிலோசையின் பரிபாஷைகள்..
        அதிகாலையின் வரவேற்புகள்..
       புத்தம் புது காலை..
      பொன்னிற வேளை.." 
                       - என்ற பாடலில் வகுப்பில்,அவள் பாடி அறிமுகமாகிறாள்ஜானகி தேவி என்ற ஜானு. ராஜாவின் பாடல் நம்மை ஒரு அறை அறைந்து மயக்கத்தில் இருந்து எழுப்பி  மறுபடியும் மயங்க செய்கிறது.அதுவரை 37 வயதான காட்டனாகிய  ராமே பரிட்சயமான நமக்கு 94 இன்  ராம் பரிச்சயமாக ஆரம்பிக்கிறான்.அதோ குட்டி சுபாஷினி , அதோ குட்டி முரளி ,அதோ குட்டி சதீஷு என நம்மை ஆவலாக கூவ செய்கிறது.

      "என்னடா இவன் படத்தை அப்டியே  சொல்ட்டு இருக்கான்" என்கிற தங்களின் புரிதல் எனக்கு புரிகிறது. ஏனெனில் இப்படமும் அப்டியே. அனைத்து இடங்களிலும் நம்மை பிணைக்க செய்கிறது . இதன் பின் நடக்கும் சில சம்பவங்கள் நம்மை அவர்களோடு பிணைய செய்யும். பள்ளி தோழர்களினி குறும்பு, ராமும் ஜானுவும் தமக்குள் இருப்பது நட்பன்று காதல் என புரிவது , ஓர் கவிதை இழை..!
    தான் விரும்பும் பெண் இதற்க்கு முன் தோழியாக இருந்தும் , அவளுடன் நன்கு பேசியும் பழகியும்,  காதலியாக அவளை பார்க்கும் காட்சி. பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுக்கும் பொழுது அதை அவள் அருகில் நின்று அதை எடுக்கும் காட்சி ரம்மியம். சுபாஷினியும் அவனது தோழர்களும் அவனை பிடிக்க, அவ்விடத்த்திலிருந்து தப்பி ஓடிஏ முயலும் பொது, அது ஜானுவின் கண்களில் கண்டு முடியாமல் போக, நெஞ்சு பதறுகிறான். "இப்போ உனக்கு வேர்க்கற அளவுக்கு இங்க என்ன பண்ணிட்டாங்க" என தொனிக்கும் பொழுது, தன தோழனை விட்டு கொடுக்காத சுபாஷினி  "அவன் " என கெத்தாக கூறி "ஏன் டா நெஞ்சு இப்டி அடிச்சுக்குது" என சுபாஷினி நெஞ்சில் கை வைக்கும் போது திடமாக நின்ற ராம். ஜானுவின் கை அவனை தொட்டதும், எல்லாம் இருளாகிறது..! பதற்றம் விண்ணை தாண்டியது. இறுதியில் முடிவு, மயக்கம்..! :D 

        நீண்ட நாட்களாக காணாத அவனது ஜானு வை இன்று காண போகிறோம் என்ற ஆவலில் அவன் மனதளவில் 1994 இன் ராமாகிறான். அவனை தவிர அங்கு அனைவரும் நிகழ்காலத்தில் இருந்தனர்k. எப்போ வருவாள் ஜானு என்கிற  பரிதவிப்பு  நமக்குள்ளும் தவித்து கொண்டிருந்தது.
       ஒரு மெல்லிய இசை பின்னணியிலொரு car அங்கு வந்தது. அதன் பின் ஒலித்த புல்லாங்குழலின் கீதம், வந்துவிட்டால் நமது இளவரசி ஜானு என்று பறைசாற்றுவதாக இருந்தது. அதன் பின் ஜானுவை  கண்டதும் ,  அவள் நமது ஜானுவானாள் .


  "Sorry, கொஞ்சம் late ஆயிடுச்சு" என அவள் கூறியதும்,சதிஷ் "அம்மா தாயே இப்போவாது வந்தியே" என கூறுவது , நம் மனத்தின்  கூவல்.  "எல்லாரும் வந்துட்டாங்க போல" என ஜானு சுற்று முற்று பார்ப்பது பார்வை  அல்ல, ராமை காண விழையும் தேடல் என அனைவர்க்கும் நன்கு உணர்ந்தது.
அனைவரும் ராமை , விடயம் சொல்லியும் இங்கு வர வைக்க இயலவில்லை. அவர்கள் படும் பாடை கண்ட ஜானு "என்னாச்சு" என நகைப்புடங்கேட்க," இல்ல...!! ராம் வந்திருக்கான் " என்று சுபாஷினி கூறியதும்,அதன் பின் யார் பேசிய வாரத்தைகளும் அவள் செவியில் சென்று விழவில்லை. மறுபடியும் சுற்றம் நிசப்தம். அவளது தேடல் ஓர் முடிவுக்கு வந்து இங்க தான் இருக்கிறான் ராம் ,அவனை காண வேண்டும் என்ற பரிதவிப்பு,  ஜானுவிடமும் காதல் தளர்ந்தபாடில்லை என்பதை மிக அழகாக காட்டியது.
  "ராம் பழைய ராம் தானா, நம்மள விட்டுட்டு போனானே , ஒரு வார்த்தை கூட சொல்லாம போனானே" என்கிற குழப்பத்தில், இவள் ராமை தேடி நகர்கிறாள். ராம் அங்கு நிற்கிறான். அவள் வந்தது தெரிந்தும் திரும்பாமல் முழிக்கிறான். அவன் புறந்தலையை மட்டும் காணும் ஜானுவுக்கு அவனது முகம் தெரியவில்லை.இவனது புறந்தலையை காணவா 22 வருடங்கள் காத்திருந்தேன். நான் வந்தது தெரிந்ததும் பார்க்க தான் வரவில்லை, பக்கத்தில் வந்ததும் திரும்புவது செய்ய கூடாதா? "எப்படி இருக்க ஜானு, பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு " என எளிய ரீதியிலாவது விசாரிக்க கூடாதா என ஏங்கி நின்றாள் ஜானு.நம்ம ஆளு இன்னும் திரும்பவில்லை. "எப்படியும் போடா" என்று போயிருப்பார் மற்றவரெனின். அனால் நிற்பது ஜானுவாயிற்றே. அவளுக்கு அவனை காண வேண்டும், 22 வருட தவம் அவளுக்கு. அவன் குரலை கேட்க வேண்டும். கூழலினும் இனிய ஓசையில் கூப்பிட்டால் அவள் "ராம் "

        இதோ கூப்பிட்டுவிட்டால், திரும்பியாக வேண்டும். திரும்பி எப்படி அவள் பூமுகத்தை காண்பேன். எப்படி அவள் மலர்விழியை நோக்குவேன். வாரணம் ஆயிரம் பலம்கொண்டு திரும்பினான் ராம்.  கண்டான் ஜானுவை. ஜானு .. ஜானு..!! என்ன பேசுவது. வார்த்தை அல்ல, காற்று வருவதே சிரமமானது.  நெஞ்சம் படபடத்தது பதற்றம் மறுபடியும் விண்ணை தாண்டியது இறுதியில் முடிவு, மயக்கம்..! :D 
        இதன் பிறகு நடக்கும் அத்துணை காட்சிகளும் கவிதையினும் இனிமையாக விழி வழியில் இதயம் நுழையும். அனைவரும் ஜானு வை கண்டு மகிழ்ச்சி போங்க முரளியிடம் மட்டும் ஒரு புல்லினை ஒத்த புன்னகை. ஏன் இந்த ஓர வஞ்சனை என்பதற்கு, ஆம் முரளியும் ராமச்சந்திரனும் தான் கல்லூரியில் ஜானகிதேவியை பார்க்க சென்றனர் என்பது பின்பு புலப்படும்.




       நீண்ட நாட்களுக்கு பின் தனியாக சேரும் ராமும் ஜானுவும் எங்கே போவது என்று தெரியாது,"Saloon" செல்லலாம் என்று முடிவெடுத்து, தான் இறுதியாக ராமை எவ்வாறு கண்டேனோ, அவ்வாறே இப்போதும் காண வேண்டும். ஏன், இதற்க்கு பின் காண முடியுமோ என்னவோ..!! அவளுக்கு இப்பொழுதும் துக்க சமயங்களில் அவள் கண்  முன் வருவது அவளது 10ஆம்  வகுப்பு ராமின் முகமல்லவோ..!
      கொஞ்சம் சோக கீதங்களில் நம்மை கொண்டு சென்று கொண்டிருக்க, இருவரும் "Café shop"  இல் நடத்தும் ராகங்கள் தேனினும் இனிமை. தன் வாழ்வில் இவ்வாறு நடந்து விட்டிருக்க கூடாதா?? என்று ஜானு உருகி கூறும் கட்டுக்கதையும், அதன் பின் ஒலிக்கும் பாடலும் உணர்வலைகளால் சிலிர்த்ததோடும். கற்சிலையும்  கண்ணீர்  சிந்தும்,. இவ்வாறு நடந்திருக்கலாகாத என நம்மையும் ஏங்கச்  செய்யும்.




      ஒருவரை மிக பெருமையாக கூறுவதற்கு மிகுந்த உவமைகளோ, உவமேயங்களோ கவிதைகளிலும், உரைநடைகளிலுமே தேவை. நடைமுறைக்கு மூன்றெழுத்து போதும்..! ஆம். அம்மா..!! தன பசிக்கு உப்புமா கிண்டிய ஜானுவுக்கு, அவ்வுப்பும்மா எப்படி இருக்கிறது என்பதை எந்த வகையில் சொன்னாலும் ஒப்பாகாது..! "என் அம்மா சமைச்ச மாதிரி இருக்கு" என்ற ஒற்றை வார்த்தை போதும் என்பது ராமிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
    அது போல," நீ எப்படி இருக்க ஜானு" என்ற கேள்விக்கு " என் அம்மா மாதிரியே கேட்கற " என்ற ஜானுவின் பதில் உவமைகளுக்கெல்லாம் அப்பால் என தோன்ற செய்யும். ஆம், தன் பிள்ளையின் புன்னகைக்கு பின் சந்தோஷம் தான் இருக்கிறதா என்பதை தாயையன்றி வேறாறிவார்.. ஆனால் அவளது அந்த நிலையில் அவளது தாய் கூட அறிந்திருக்கலாகாது. ஆனால் ராம் அறிவான். அவன் நலம் விசாரித்ததற்கு ஜானுவின் பதில் "சந்தோஷமாயிருக்கேனா னு தெர்ல, ஆனா நிம்மதியா இருக்கேன்".....!
   தாய் அறிவாலோ இதன் பொருளை. ராமிற்கு தெரியும் தன்னை தவிர ஜானுவை யாராலும் மகிழிச்சி கொள்ள  செய்ய இயலாது....!! அவளை நிம்மதியாகவாது, இருக்க செய்ததை எண்ணி அவனது பதில் கர்வத்தோடு, "GOOD"..!


       
        ராமிற்கு எப்போது என்ன வேண்டும் என்பதை ஜானுவை தவிர வேறாரும் அறியிலார். ஏன் ராமிற்கு கூட தனக்கு எது வேண்டும் என்பது தெரியாது. நண்பர்களுக்கு தனது மகளின் புகைப்படத்தை காட்டும் பொழுது. ராமிற்கு மட்டும் அவர்கள் தராது அனைவரும் கண்டிருந்தனர். அவளது மகளை காண துடித்து கொண்டிருந்த ராமை ஜானுவை தவிர வேற யாரும் பார்க்க வில்லை. அது போல ராம் பல வருடங்களாக ஜானு குரலில் கேட்க நினைத்த பாடலை அவன் எந்த ஒரு நேரத்தில் கேட்க வேண்டும், அது எவ்வளவொரு சிறந்த தருணமாக ராமிற்கு இருக்க வேண்டும் என்பதை ராமை விட நன்கு அறிந்திருந்தால் ஜானு. அப்பாடலை ஜானுவின் குரலில் இருள் சூழ்ந்த பொழுதில் ஜானுவின் முகம் எப்படி இருக்கும் அதை பாடும் பொழுது என்ற பதட்டத்தோடு ராம் ஜானுவை காணும் பொழுது "இவள் தான் அந்த பாவமான ராதையோ" என நம்முள் பூக்க செய்தால்..!!


        இதோ ராம், ஜானுவின் அற்புத பொழுது முடிவுக்கு வருகிறது. ஜானு கிளம்புகிறாள். இருவரும் "Airport" செல்கின்றனர். "Car" இல்லிருந்து "Bike" க்கு மாறுகிறான் நிலை உணர்ந்த ராம். இரவங்கு தீவாய் அவர்களை சூழுந்து கொண்டிருந்தது. "என்னை அனுப்ப இருக்கிறாயா ராம். நீ என்ன சொன்னாலும் நான் செய்ய இருக்க மனம் ஏங்குகிறது. போக தோன்றவில்லை. என்னை போக ஒத்துழைக்காதே" என்பது ஜானுவின் நிலைப்பாடு.
"நமக்கு வேறு பழி இல்லை ஜானு. நம் காதல் இவ்வாறு தான் இருந்திருக்க வேண்டும். எனக்கும் உன்னை அனுப்ப மனமில்லை. உன்னுடன் உடற்புணர்தல் எனது என்னமோ, என் காதலின் எண்ணமோ அல்ல. நம் மனங்கள் புணர்ந்தது. இரண்டும் ஓர் பண் பாடியது. ஓர் பண் தான் இனியும் பாடும்" என்பது ராமின் நிலை.
இவ்விரண்டும் அவர்கள் கருத்துக்களால் உரை மாற்றவில்லை. "Car gear change"பண்ணும் காட்சி நமக்கு இக்கருத்தினை உள் செலுத்துகிறது. இவர்கள் முன்  சிரம் தாழ்த்த செய்கிறது.


முடிவுரை :

இவ்வலைப்பதிவு, நான் ரசித்த சில விடயங்களே. என் முழு உணர்வினையும் எழுத்தினால் முழுமை செய்ய இயலவில்லை. கத்துக்குட்டி அல்லவோ ..!! இத்திரைப்படத்தினை உணர  காதலனாகவோ, அல்ல, காதலில் தோற்றவனாகவோ இருந்திருக்க வேண்டும் என்ற விதி ஏற்புடையதல்ல. திருப்பாவை ரசிக்க திருமாலாகவோ, அபிராமி அந்தாதியை பாட ஆன்மிகவாதியாகவோ இருக்க வேண்டுமா என்ன..!! நல்ல "Cinema" வை ரசிப்பவன் என்ற முறையில் ரசித்து கழித்தேன்.

Comments

Post a Comment